Posts

Showing posts with the label free travel schemes

நிறுத்தப்படும் 'இலவச பேருந்து' சேவை..? பேராபத்தில் போக்குவரத்து கழகம்!

Image
சென்னை : தமிழ்நாட்டின் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தத்தளித்து வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழக பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு பகீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் கழகங்களின் மொத்தக் கடன் 38,500 கோடியிலிருந்து 52,800 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் அரசு பேருந்துகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டு 38,500 கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது 52,800 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் மாதத்துக்கு 610 கோடி ரூபாய் என்ற அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும், முறையான Fitness Certificate (FC) இல்லாத 5,480 அரசு பேருந்துகள் தினசரி லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருப்பது பெரும் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 3,380 பேருந்துகள் கூடுதலாக FC இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.. பிங்க் பஸ் திட்டத்தால் 15,780 கோடி இழப்பு .விடியல் பயணம் (பிங்க் பஸ்) திட்டம் சமூக நலன் அடிப்படையில் வரவேற்கப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட நேரடி வ...