Posts

Showing posts with the label needle sharing

கர்நாடகாவில் HIV பரவ இது தான் காரணம்! பெண்கள் அதற்கு சம்மதிக்கிறார்கள்! வெளிவந்த பகீர் ரகசியம்!

Image
கர்நாடகாவில் சுமார் 2.1 லட்சம் பேர் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு தீவிர பரிசோதனைகளை நடத்தி வந்தாலும், புதிய பாதிப்புகள் மெதுவாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் வயதினரிடையே இந்தப் போக்கு கவலை அளிக்கிறது. சில அறிக்கைகளில் 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளம் பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தரவுகளைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக அந்த எண்ணிக்கை பரவியதாக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் பின்னர் தெளிவுபடுத்தியது. இருந்தாலும், 18-35 வயதினரிடையே பாதிப்பு அதிகரித்து வருவது உண்மை என்பதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எச்.ஐ.வி. என்பது வைரஸ் தொற்று. இது நீண்ட காலம் சிகிச்சை இல்லாமல் இருந்தால் முன்னேறி எய்ட்ஸ் எனப்படும் மேம்பட்ட நிலைக்குச் செல்லும். எச்.ஐ.வி.யை முன்கூட்டியே கண்டறிந்து தொடர்ந்து மருந்து எடுத்தால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும் என்பது இன்றைய மருத்துவ உண்மை. முக்கிய காரணங்கள் உலகளவில் எச்.ஐ.வி. பரவலுக்கு முதல் காரணம் பாதுகாப்பற்ற உடலுறவு. ஆணுக்கும் பெண்ணு...

ஒரே கல்லூரியில் 800 மாணவ, மாணவிகளுக்கு HIV உறுதி.. என்ன காரணம்? வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எய்ட்ஸ் (HIV/AIDS) தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TSACS) அறிக்கையின்படி, 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பரவலுக்கு முக்கிய காரணமாக போதைப் பொருள் பயன்பாடு, குறிப்பாக ஒரே ஊசியைப் பகிர்ந்து கொண்டு போதைப் பொருளை செலுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தால் விளைந்த விபரீதம் சமீப காலமாக திரிபுராவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்கள், பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவன...