Posts

Showing posts with the label Chinnasavala

காதல் மனைவி.. இரத்தம் வந்து விடாமல்.. கல்லை வைத்து கணவன் செய்த கொடூரம்.. பிரேத பரிசோதனையில் பகீர்!

Image
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசவலை கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த கணவன், சந்தேகத்தால் ஆத்திரமடைந்து மனைவியை கல்லால் தலையில் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரியில் படித்து வருகிறார், இரண்டாவது மகன் 12ஆம் வகுப்பிலும், இளையவர் 10ஆம் வகுப்பிலும் பயில்கின்றனர். கோவிந்தன் மினி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். ரேணுகா வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் கோவிந்தன் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து ரேணுகாவின் தலையில் பலமாக தாக்கினார். இரத்த வெள்ளத்தில் சரிந்த ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, திருவெண்ணைநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மருத்துவர்கள் தீவி...