மனைவிக்கு ஏன் குழந்தை பிறக்கல..? ஸ்கேன் செய்த மருத்துவர்.. மிரண்டு போன கணவன்..!
குஜராத்தைச் சேர்ந்த 34 வயது நபர், பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது அவரது வாழ்க்கை மோசடி விவகாரத்தால் கேள்விக்குறியாகியுள்ளது. மணமகளின் வயதை மறைத்து, போலியான ஆவணங்களை வைத்து திருமணம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.குஜராத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் இந்த நபருக்கு, குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மணப்பெண் தேடி வந்தனர். கடந்த ஆண்டு ஒரு 32 வயது பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மணமகள் 1991 மே மாதம் பிறந்தவர் என்று கூறி, பாஸ்போர்ட்டை ஆதாரமாக பெண் வீட்டார் காட்டியதை அடுத்து, மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு சம்மதித்தனர். இதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆனால், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆன பிறகும், குழந்தை இல்லாததால் கவலைப்பட்ட தம்பதி, மருத்துவ பரிசோதனைக்கு சென்றனர். கணவனுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என்று தெரியவந்த நிலையில், மனைவியின் கர்ப்பப்பை சோனோகிராபி பரிசோதனையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியது. மனைவியின் வயது 42 முதல் 45 இருக்கலாம் என்றும், இயற்கையான முறை...