பிக்பாஸ் போட்டியாளர் கைது - Tik Tok வீடியோவால் சிக்கிய பரிதாபம்..!
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. தெலுங்கிலும் தொடங்கவுள்ளது. ஹிந்தியிலும் விரைவில் பதிமூன்றாம் சீசன் தயாராகிவருகிறது. இந்நிகழ்ச்சியின் முந்தய சீசன் போட்டியாளரான நடிகர் அஜாஸ் கான் தற்போது போலிசாரால் மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தூக்குடு, நாயக், டெம்பர், ரோஃக் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் அண்மைகாலமாக டிக் டாக்கில் இனவாத வெறுப்பை காட்டும் வகையிலான வீடியோவை வெளியிட்டுவந்துள்ளார். நாட்டில் நடக்கும் பல்வேறு விசயங்கள் குறித்து அவர் சர்ச்சையாக பேசியுள்ளார். இதனால் அவர் மீது பலரும் புகார் அளித்துள்ளனர். அதன் விளைவாக அவரை கைது செய்துள்ளனர்.