தனி தொகுதியில் கிருஸ்துவர் போட்டியிடுவதா? இது ஜனநாயக விரோதம்! இந்து முன்னணி அதிரடி கோரிக்கை!
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் (எக்மோர்) தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழன் பிரசன்னா ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் (பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டவை) உள்ளன. இந்தத் தொகுதிகளில் இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற அரசியல் சட்ட விதிமுறையை சுட்டிக்காட்டினார். தமிழன் பிரசன்னா கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் என்பதால், அவர் இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. எனவே, அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர். அவர்கள், “பட்டியலின மக்களின் உரிமையை மோசடி செய்யும் முயற்சி” என்று திமுகவை விமர்ச...