அலங்கோலமாக கிடந்த 30 வயது இளம்பெண்.. கடைசி உயிர் இருக்கும் போது 28 வயது அரக்கன் செய்த கொடூரம்..!
காஞ்சிபுரம் : கரியன் கேட் அருகே தனிமையில் இருந்த இளம் பெண் அஸ்வினி, நகை கொள்ளையடிக்க வந்த கொடூரர்களால் இரும்பு ராட்டால் அடிக்கப்பட்டு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றபின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். கொலை வழக்காக மாறிய சம்பவத்தில், போலீசார் ஒரு குற்றவாளியை கைது செய்துள்ளனர். மீதமுள்ள துணை குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது போலீசார் மீது ஆத்திரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் தாலுக்கா, திம்ம சமுத்திரம் ஊராட்சியின் கரியன் கேட் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த 30 வயது அஸ்வினி, செங்கல்பட்டில் விடுதி காப்பாளராக பணியாற்றும் ஜெய் சுரேஷின் மனைவி. இந்தத் தம்பதியினருக்கு 11 வயது மகள் மற்றும் 2 வயது மகன் உள்ளனர். கணவர் வேலைக்காக வெளியூரில் இருப்பதால், பாதுகாப்பு கருதி அஸ்வினி தனது இரு குழந்தைகளுடன் தாய்வீட்டில் வசித்து வந்தார். இருப்பினும், கடந்த 24ஆம் தேதி உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற அஸ்வினி, இரவு தனது வீட்டில் தங்கி, காலை தாய்வீட்டுக்கு வருவதாகக் கூறினார்.மறுநாள் நண்பகல் வரை அஸ்வினி...