Posts

Showing posts with the label outside support

ஆளுநருக்கு விஜய் அனுப்பிய ஈ-மெயில்! உள்ளே வரும் மாற்றுக்கட்சி MLA-க்கள் யார் யாரு?

Image
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகும் நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களில் முன்னிலை வகிக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், மாநில ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், “இரண்டு வார காலத்திற்குள் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைப்பேன்” என விஜய் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளில் தவெக சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 118 இடங்கள் தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்கள் குறைவாக உள்ளது. இந்நிலையில், ஆளுநரிடம் தனது நிலைப்பாட்டை விளக்கி, ஆதரவு தேடும் முயற்சியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக தரப்பில், “மக்கள் விருப்பத்தை மதித்து, ஸ்திரமான அரசை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” எனக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், விஜய்யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்வினைக்காக அரசியல் பார்வையாளர்கள் ...