ரயில்நிலையத்தில் இருந்த 3 மாணவிகள்.. பிடித்து விசாரித்த போலீசாருக்கு.. காத்திருந்த அதிர்ச்சி..
சென்னை, அக்டோபர் 28: செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்ததற்காக பெற்றோரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிய மூன்று பள்ளி மாணவிகளை சென்னை போலீசார் பத்திரமாகக் கண்டுபிடித்து, அவர்களது பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பாண்டி பஜார் பகுதியில் வசிப்பவர்களான 10-ஆம் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவிகளான நிஷா, இந்திரா, மேக்னா (பெயர்கள் மாற்றப்பட்டவை) ஆகியோர், தொடர்ந்து செல்போனில் ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவர்களது பெற்றோர் கடுமையாகக் கண்டித்தனர். இந்தக் கண்டனத்தைத் தாங்க முடியாமல், மூன்று மாணவிகளும் வீட்டை விட்டு வெளியேறி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் சோகமாக அமர்ந்திருந்தனர்.ரயில் நிலையத்தில் காவலர் பணியில் இருந்த போது, செய்வதறியாமல் அமர்ந்திருந்த இந்த மாணவிகளைப் பார்த்து விசாரித்தனர். ஆரம்பத்தில் மாணவிகள் முன்னுக்கு பின்னுக்கு முரண்படும் தகவல்களைக் கூறியதால், போலீசார் அவர்களை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விரிவான விச...