15,000 போச்சு.. சைபர் மோசடியில் சிக்கிய சின்னத்திரை நடிகர் செந்தில்.. கதறும் வீடியோ..!
சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் செந்தில். இவர் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அண்ணா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் செந்தில், தான் சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்ததாக கூறி அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு நடந்த சைபர் கிரைம் மோசடி குறித்து விவரித்துள்ளார். செந்தில் கூறியதாவது: "எனக்கு தெரிந்த நபர் ஒருவர் வாட்சப் மூலம் மெசேஜ் அனுப்பினார். அதில் அவசரமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாக கேட்டிருந்தார். நான் டிரைவிங்கில் இருந்ததால், உடனடியாக அவர் அனுப்பிய வாட்சப் எண்ணுக்கு பணத்தை அனுப்பிவிட்டேன். பணம் அனுப்பிய பிறகு, அந்த வாட்சப் எண்ணில் இருந்த பெயரை கவனித்தபோது, அது வேறொருவரின் பெயராக இருந்தது. சந்தேகம் அடைந்து அந்த எண்ணுக்கு போன் செய்து விசாரித்தபோது, தான் அவரு...