Posts

Showing posts with the label Puducherry police

1 கோடி 2 கோடி இல்ல ரூ.206 கோடி.. இளைஞரின் வாழ்க்கையை புரட்டி போட்ட Work From Home..

Image
புதுச்சேரி, செப்டம்பர் 2: இந்தியா முழுவதும் 23 மாநில போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த சைபர் கொள்ளை கும்பல், கொள்ளையடித்த பணத்தில் துபாய்க்கு 'ஜாலி டிரிப்' போய் வசமாக சிக்கியது! 35 போலி நிறுவனங்கள், 2168 புகார்கள், 206 கோடி ரூபாய் மோசடி என, இந்த கூட்டத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக நான்கு கொள்ளையர்களை கைது செய்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் 4.5 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டனர். இந்த வழக்கு 200 கோடிக்கும் மேல் தொடர்புடையதாக இருப்பதால், மத்திய அமலாக்க துறை (ED) தானாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்துள்ளது. கொள்ளையர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது! அப்பாவி இளைஞரின் 'வர்க் ஃப்ரம் ஹோம்' கனவு.. கொள்ளையர்களின் பொய் வலை! இந்த பரபரப்பான சம்பவம், புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஒரு பட்டதாரி இளைஞரின் வாழ்க்கையில் இருந்து தொடங்குகிறது. கடந்த வருடம், இணையதளத்தில் 'வர்க் ஃப்ரம் ஹோம்' வேலை வாய்ப்பு கிடைத்தது. "உங்கள் ஃப்ரீ டைமில் லாகின் ஆகி டேட்டா என்ட்ரி செய்யலாம். போரடித்தால் எப்போது வேண்டுமானாலு...