கரூர் கோரம் : பெரும்பாலானோர் பலியானதற்கு ஒற்றை காரணம்.! அதிர வைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை..!
கரூர், செப்டம்பர் 28, 2025 : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் மற்றும் நடிகர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர், இது அரசியல் பிரச்சாரங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜயின் மூன்றாவது கட்ட பிரச்சாரமாக நேற்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்த மக்கள் சந்திப்பின் போது, கரூரில் விஜயின் வாகனத்தை அருகில் காண விரும்பிய கூட்டத்தினர் கட்டுக்கடங்காத நெரிசலில் ஈடுபட்டனர். விஜய் உரையாற்றியபோது தொடங்கிய இந்த நெரிசல், அவரது பேச்சு முடிந்து கூட்டம் கலைந்த பின்னரும் தீவிரமடைந்தது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட பலர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 81 பேர் கரூர் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்...