Posts

Showing posts with the label Geeta Mali

கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல பாடகி - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Image
பிரபல பாடகி கீதா மலி. மராத்தி மொழிகளில் அதிக பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர். இவர் தன்னுடைய கணவருடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுவிட்டு அண்மையில் தான் மும்பை வந்தார்.  வெளிநாடு இன்பச்சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களையும் அவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரண்டு நாட்கள் முன்பு பதிவு செய்தார். மும்பையில் இருந்து அவர் தன்னுடைய சொந்த ஊரான நாஷிக் செல்ல காரில் கணவருடன் பயணித்துள்ளார்.  அப்போது, சரியாக அதிகாலை 3 மணியளவில் லகே பாட்டா என்ற இடத்தில் அவரது கார் நின்று கொண்டிருந்த கன்டெயினர் லாரி மீது வேகமாக மோதியுள்ளது.  இதில், காரின் முன்பக்கம் சிதைந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அடிபட்ட கீதா மற்றும் அவரது கணவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால், கீதா அதிகப்படியான ரத்தம் உடலில் இருந்து வெளியேறிவிட்ட காரணத்தினால் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டார். அவரது கணவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது, கீதாவின் ரசிகர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.