ப்ளீஸ்ங்க.. இன்னைக்கு நைட் வேணாமே? புதுப்பெண்ணின் முதலிரவு கோரிக்கை! காலையில் காத்திருந்த மரண ட்விஸ்ட்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சத்திரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த 29 வயதான ராதாகிருஷ்ணன், காற்றாலை மின் உற்பத்தி கழகத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு முன்பே திருமணம் நடைபெற்று மனைவி, ஒரு குழந்தை என குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ராதாகிருஷ்ணனின் குடிப்பழக்கம் குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. மனைவி எத்தனை முறை எச்சரித்தும் அவர் கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்பம் கலைந்த நிலையில் தனது வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை சீர்படுத்திக் கொள்ள விரும்பிய ராதாகிருஷ்ணன், இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். ஒரு புரோக்கர் மூலம் கேரளாவில் பெண் பார்க்கச் சொன்னார். கேரளாவைச் சேர்ந்த அந்தப் புரோக்கர், “திருமணம் செய்து தர வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும்” என்று கூறினார். ராதாகிருஷ்ணன் அதற்கு சம்மதித்தார். பின்னர், கேரளா கொழுஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காக ராதாகிருஷ்ணன் தன் வீட்டாருடன் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்தப...