"விஜய் பேசியது தவறான தகவல்" - லிஸ்ட் போட்டு அடித்த தமிழ்நாடு அரசு
நாகப்பட்டினம், செப்டம்பர் 21: தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர், நடிகர் விஜய் நாகப்பட்டினத்தில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் அரசின் சில கொள்கைகளை விமர்சித்தபோது, சில தவறான தகவல்களைப் பரப்பியதாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) விளக்கமளித்துள்ளது. அலையாத்தி (மங்களம்) காடுகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, நாகப்பட்டினத்தில் கடல்சார் கல்லூரி இல்லை, காவல்துறை பிரச்சாரங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கிறது என விஜய் கூறியது தவறு என அரசு தெரிவித்துள்ளது. இந்த சரிபார்ப்பு சமூக ஊடகங்களில் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 20) நாகப்பட்டினத்தில் நடந்த TVK-வின் இரண்டாவது கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தில் பேசிய விஜய், மீனவர்களுக்கான ஆதரவை வலியுறுத்தினார். அப்போது, "மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்தி காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனக் கூறினார். அதேபோல், "கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை" என்றும், "மக்களை சந்திப்பதற்கு காவல்துறை கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அனுமதி இல்லை என்கிறார்கள்...