ஆபத்து!! முட்டையுடன் இத சாப்பிடுவது பல உறுப்புகளை செயலிழக்க செய்யுமாம்!
முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடலின் பல உறுப்புகளும் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை முட்டை புரதச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்த சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது தசை வளர்ச்சி, மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் சில உணவுகளுடன் முட்டையை சேர்த்து சாப்பிடும்போது அதன் நன்மைகள் குறைந்து, செரிமான மண்டலம், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என உணவு நிபுணர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். முட்டையுடன் சேர்க்கக் கூடாத முக்கிய உணவுகள் மற்றும் பாதிப்புகள் 1. எலுமிச்சை / சிட்ரஸ் பழங்கள் முட்டை சமைக்கும்போது எலுமிச்சை சாறு சேர்ப்பது அல்லது சாப்பிட்ட உடனே ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை உண்பது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இதயத் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2. வாழைப்பழம் முட்டை சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும்...