Posts

Showing posts with the label petrol bunk

காரில் சடலமான மனைவி.. பழிவாங்க கணவன் எடுத்த கொடூர முயற்சி.. எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது..

Image
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த 50 வயது பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி (45) 2025 நவம்பர் 6-ஆம் தேதி ஆவுடைபொய்கை அருகே தைல மரக் காட்டுப்பகுதியில் காருக்குள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குன்றக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மகேஸ்வரியின் பணிக்கு அவ்வப்போது ஆக்டிங் ஓட்டுநராக வந்த 30 வயது சசிகுமார் கடைசியாக அவரை அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாயின. ஆரம்பத்தில் சசிகுமார் அளித்த வாக்குமூலத்தில், மகேஸ்வரி நடத்திவந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் தான் வேறொருவரிடம் பெரிய அளவில் கடன் வாங்கி அவருக்குக் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது நீண்ட நாட்கள் இழுத்தடித்ததாகவும், பணம் கொடுத்தவர் தன்னைத் தொல்லை செய்து வந்த நிலையில் மகேஸ்வரியைத் திட்டமிட்டு உயிரிழக்கச் செய்ததாகவும் கூறினார். சம்பவ நாளில் ஆவுடைபொய்கை பகுதியில் வீட்டு மனையைப் பார்ப்பதற்காக மகேஸ்வரியுடன் சென்றதாகவும், அங்கு பணம் குறித்து வாக்...