எந்த டிரைனும் இரவு 12 மணிக்கு புறப்படாது! ஏன் தெரியுமா?
நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் எந்த ரயிலும் புறப்படுவதில்லை. டிக்கெட் முன்பதிவில் இந்த ஒரு விதி தெரியாமல் பலர் தேதி தவறி சிக்கலில் சிக்குகின்றனர். விளக்கம் இதோ. நள்ளிரவு 12 மணிக்கு ஏன் எந்த ரயிலும் புறப்படுவதில்லை? டிக்கெட் முன்பதிவில் கவனம் தேவைஇந்தியாவில் எந்த ஒரு ரயிலும் நள்ளிரவு 12 மணிக்கு (00:00) எந்த நிலையத்திலிருந்தும் புறப்படுவதில்லை. வழியில் இடைநிறுத்த நிலையங்களிலும் சரியாக 00:00 மணிக்கு வந்து புறப்படும்படி நேர அட்டவணை வைப்பதில்லை. இது தற்செயல் அல்ல. ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து பின்பற்றும் 24 மணி நேர கடிகார முறையின் அடிப்படையில் உருவான நடைமுறை இது. 24 மணி நேர கணக்கில் ஒரு நாள் 00:00 முதல் அடுத்த 00:00 வரை. நள்ளிரவு 12 மணி என்பது 00:00. அடுத்த நிமிடம் 00:01 என்பது அடுத்த நாள். எனவே 00:00 என்பது முந்தைய நாளின் இறுதியா, புதிய நாளின் தொடக்கமா என்ற குழப்பம் எளிதில் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தவிர்க்கவே ரயில்வே நேர அட்டவணையில் சரியாக 00:00-ஐ தவிர்க்கிறது. பெரும்பாலும் 23:50, 23:55 அல்லது 00:01, 00:03 என்று நேரத்தை சற்று முன்னோக்கியோ பின்னோக்கியோ மாற்றுகின்றனர். 24 மணி நேர...