ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேணாம் இன்ஸ்டாவில் கெஞ்சிய மாணவி 9ஆம் வகுப்பு மாணவர்கள் கைது! குலைநடுங்க வைக்கும் சம்பவம்!
கிருஷ்ணகிரி : சிறுமியை சமூக வலைதளத்தில் மிரட்டி நிர்வாண படங்கள் பெற்று 10 லட்சம் மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலைப் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் 9ஆம் வகுப்பு சிறுமியை இன்ஸ்டாகிராம் மூலம் மிரட்டி, நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று, அவற்றை அவளது தந்தைக்கு அனுப்பி 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. சம்பவத்தின் விவரம்: கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை அருகே உள்ள வாடகை வீட்டின் மேல் தளத்தில் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் தனது பெற்றோருடன் தங்கியிருந்தார். உடல்நிலை காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அவர், அருகிலுள்ள தணிகார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுவனின் நண்பர்கள் இருவர் அவ்வப்போது அவரது வீட்டுக்கு வருவது வழக்கம். அப்போது மேல் தளத்தில் வச...