9 வருடம் கழித்து ஆபாச வீடியோ மூலம் தாயின் மரணத்திற்கு காரணமான நபரை கண்டுபிடித்த மகன்.. சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம்..
புவனேஸ்வர், டிசம்பர் 16, 2025 : ஒடிசா மாநிலத்தில் 2016-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம், இன்றும் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. சினிமாவில்கூட இதுவரை பார்க்காத அளவுக்கு கொடூரமான இந்த கொலை வழக்கு, ஒரு ஆபாச வீடியோவின் மூலம் தீர்க்கப்பட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தது, உயிரிழந்த பெண்மணியின் இளம் மகனும் அவனது நெருங்கிய நண்பனும் தான். தாயை இழந்த துயரத்தில் இருந்தாலும், நீதிக்காக அசாத்திய போராட்டம் நடத்திய அந்த மகனின் கதை, உண்மையில் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. 2016-ஆம் ஆண்டு, ஒடிசாவின் ஒரு சிறிய நகரத்தில் வசித்து வந்த சுமித்ரா பாரிக் திடீரென காணாமல் போனார். அவரது கணவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் நான்கு மாதங்கள் கழித்தே, அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சுமித்ராவின் 12 வயது மகன் பிரத்யும்மன், தாயை இழந்த துயரத்தில் ஆழ்ந்தான். ஆனால் அவன் மனதில் ஒரே எண்ணம் – தாயின் மரணத்துக்கு நீதி கோருவது. தாயின் மரணத்திற்கு காரணம் என்ன..? யார் செய்திருப்பார்கள்..? என்று அவன் நினைத்து...