’கடைக்காரர் கிட்ட நான் விக்ரம் மகன் அப்டின்னு சொன்னேன்..’ - துருவ் சொன்ன குட்டி ஸ்டோரி
ஹைதராபாத், அக்டோபர் 22 : இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ், பசுபதி, லால், அமீர், அனுபமா, ரஜிஷா ஆகியோர் நடித்த 'பைசன்' படம் தமிழ் சினிமாவில் பரவலான பாராட்டுகளையும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் அக்டோபர் 24 அன்று வெளியாக உள்ள நிலையில், ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அனுபமா, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துருவ், "இது என் ஹைதராபாத்தில் புரமோட் செய்யும் முதல் படம். எனவே இது எனக்கு மிக மிக ஸ்பெஷல்" என்று தொடங்கினார். அவர் தொடர்ந்து சமீபத்தில் ஹைதராபாத்தில் சூட்கேஸ் வாங்க ஓர் மால் சென்றதைப் பற்றி சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்தார். "கடைக்காரருடன் பேரம் பேசும்போது வெளியே இருந்து சிலர் எனக்குக் கை காட்டினார்கள். அவர்கள் உங்கள் நண்பர்களா என்று கடைக்காரர் கேட்டார். இல்லை என்றதும், 'நீங்கள் நடிகரா?' என்று கேட்டார். 'ஆம்' என்றேன். உடனே என் தாடியுடன் இருக்கும் ம...