Posts

Showing posts with the label political tragedy

அடித்து ஆட தொடங்கிய த.வெ.க.. திட்டமிட்ட படுகொலை.. வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பதிலடி..

Image
சென்னை, செப். 28 : தமிழக அரசியல் வரலாற்றில் கருப்பு பக்கமாக மாறியுள்ள கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்ததற்கு காவல்துறை திட்டமிட்ட சதியில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி மற்றும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மீள முடியாத துயரத்தில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அனைவரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாடுகளுக்கு முன் கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் கரும்புள்ளியாக உருவெடுத்துள்ளது. இது தமிழக அரசியலில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொது நிகழ்ச்சியில் இவ்வளவு பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவமாக பதிவாகியுள்ளது. போராட்டங்கள், சமூக நலன் போன்றவற்றுக்காக உயிரிழந்தவர்கள் ஏராளம் இருந்தாலும், இது போன்ற ஒரு அரசியல் பரப்புரை நிகழ்ச்சியில் நிகழ்ந்தது மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்த...