கணவருக்கு தெரியாமல் நூதன முறையில் உல்லாசம்! மரணத்தை முன்பே கணித்த மனைவி இறக்கும் முன் வெளியிட்ட வீடியோ!
ஆந்திராவின் டெக்கலி கிராமத்தின் அமைதியான இரவு. மெல்லிய காற்றில் பனை மரங்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன. வீடுகளின் வெளிச்சங்கள் ஒவ்வொன்றாக அணைந்து கொண்டிருந்த நேரம். திடீரென விஜயகுமாரியின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் கதறல் சத்தம் வெளிப்பட்டது. அது யாரோ துடித்து அழும் ஒலி. அக்கம் பக்கத்து வீட்டார்கள் தூக்கம் கலைந்து வெளியே ஓடி வந்தனர். “என் மகள் ஹரிணி... திடீர்னு மாரடைப்பு.. மூச்சே விட முடியலன்னு சொன்னா.. கொஞ்ச நேரத்துல பேச்சு மூச்சு இல்லாம ஆகிடுச்சு.. உயிர் போயிடுச்சு!” விஜயகுமாரி தரையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஈஸ்வரராவ் மௌனமாக நின்றிருந்தார். வீட்டுக்குள் சிறிய குழந்தை ஒன்று பயத்துடன் அழுது கொண்டிருந்தது. ஊர் மக்களும் உறவினர்களும் கூடினர். ஹரிணியின் இறுதிச் சடங்குகள் வேகமாக முடிந்தன. ஐந்து நாட்கள் கழித்து, அந்தக் கிராமத்தின் அமைதி திரும்பியிருந்தது. ஆனால், ஹைதராபாத்தில் இருந்த ஒரு இளைஞன், நாகேந்திரா, அந்த அமைதியை உடைத்தான். காவல் நிலையத்தில் அவன் கண்களில் கண்ணீருடன் ஒரு வீடியோவை காட்டினான். அதில் ஹரிணி பயத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்: “நான் ஐந்தாம் தேதிக்...