Posts

Showing posts with the label Kennadi Club Tamil Movie

பிகில் படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை - பிகில் படக்குழு பிரஷர் கொடுக்கவும் இல்லை - முன்னணி இயக்குனர் விளக்கம்..!

Image
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தன்னுடன் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார் விஜய்.தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24-ம் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அக்டோபர் 24-ம் தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கென்னடி கிளப்" என்ற படமும் விளையாட்டை மையப்படுத்திய கதை தான் என்று கூறுகிறார்கள். இந்த படத்திற்கும் பிகில் படத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.  இரண்டு படங்களும் எமோஷனல் கலந்த விளையாட்டு அரசியலை கூறும் படங்கள் தான் என்ற பேச்ச...