ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் வினோதமான முறையில் உல்லாசம்.. கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..
சம்பல் (உத்தரபிரதேசம்) : மீரட் 'ப்ளூ டிரம்' கொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் மற்றொரு கொடூர கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலணி வியாபாரி ராகுல் (வயது 38-40) என்பவரை அவரது மனைவி ரூபி (வயது 30) மற்றும் கள்ளக்காதலன் கௌரவ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, உடலை வூட் கிரைண்டர் (கட்டை அரையும் இயந்திரம்) கொண்டு துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த நவம்பர் 18-ஆம் தேதி முதல் காணாமல் போன ராகுல் குறித்து அவரது மனைவி ரூபி போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால், டிசம்பர் 15-ஆம் தேதி சந்தௌசி பகுதியில் உள்ள ஈத்கா அருகே ஒரு வடிகாலில் பாலிதீன் பையில் சுற்றப்பட்ட பாதி சிதைந்த உடல் (தலை, கை, கால்கள் இல்லாத உடற்பகுதி) மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது, மீட்கப்பட்ட கையில் 'ராகுல்' என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் உடல் ராகுலுடையது என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில் ரூபியின் பொய்யான கூற்றுகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கம்ப...