மனுவிலேயே நடிகையின் பெயரை மறைமுகமாக குறிப்பிட்ட விஜய்யின் மனைவி சங்கீதா!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவில், 2021 ஏப்ரல் மாதம் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். ( குறிப்பு : இந்த செய்தியில் குறிபிட்டுள்ள நடிகையின் பெயரை வெளியிடாமல், வாசிப்போரின் யூகத்திற்கே விட்டு விடுகிறோம், விவாகரத்து மனுவில் நடிகர் விஜய் அவர்களின் மனைவி குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் அந்த தேதியில் விஜய்யை சுற்றி எழுந்த சர்ச்சை மற்றும் சக செய்தி ஊடகங்களில் வெளியான செய்தி ஆகியவற்றை அடிப்பபடையாக கொண்டது. இந்த நடிகையின் பெயர் தவறாகவும் இருக்கலாம், வேறு நடிகையாக கூட இருக்கலாம் என்பதையும் தெளிவு படுத்துகிறோம்) இந்தக் குறிப்பிட்ட தேதி மற்றும் மாதத்தை சுட்டிக்காட்டியதால், அந்த நடிகை யார் என்பது பொதுவெளியில் விவாதமாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் (2021 ஏப்ரல்) தங்கும் விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில், நடிகை ஒருவர் விஜயின் வீட்டிலும், அவரது நெருங்கிய நண்பர் சஞ்சீவ் வீட்டிலும் மாறி மாறி தங்கியதாகவும், அவரது கார் சஞ்சீவ் வீட்டு பார்க்கிங்கில் நின்ற...