Posts

Showing posts with the label Edappadi well incident

நிறைமாத கர்ப்பிணி மனைவி.. கயிற்றில் கட்டி, துடிதுடிக்க கணவன் செய்த கொடூரம்.. சேலத்தை அதிர வைத்த சம்பவம்!

Image
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தில் விவசாய கிணற்றில் ஏழு மாத கர்ப்பிணி இளம்பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தவர். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அருகில் உள்ள சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், கோகிலா ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.  இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுதொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கோகிலாவிடம் விசாரித்தபோது, தனது கர்ப்பத்திற்கு பக்கத்து ஊரான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அம்மாசிதான் காரணம் எனத் தெரிவித்தார். அம்மாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். கோகிலா தன...