“சார்.. என் பொண்டாட்டிய..” போன் காலில் போலீஸை பதற வைத்த கணவன்.. நேரில் சென்ற போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் : மனைவியின் தகாத உறவு தாங்க முடியாமல், இரு குழந்தைகளின் தந்தையான கணவர், மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தானே போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்த கணவர், சரணடைய போவதாக கூறிவிட்டு தப்பியோட முயன்ற நிலையில், செல்போன் டவர் லொகேஷன் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கோபால் ராஜ் (வயது 30). இவருக்கு பரமேஸ்வரி (26) என்றபெண்ணுடன் 2014-ம் ஆண்டு திருமணம் ஆகி, 8 வயது மற்றும் 6 வயது கொண்ட இரு மகள்களும் உள்ளனர். கோபால் ராஜ் அதே பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். தனது மனைவி பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், ஒரே நேரத்தில் பல கள்ளக்காதலர்களுடன் வீடியோ கால் மூலம் பேசி காதலை வளர்த்து வந்ததாகவும் கோபால் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். பலமுறை கண்டித்தும் மனைவி திருந்தவில்லை எனக் கூறி, மன உளைச்சலில் தனது கைகளால் பரமேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று முன்தினம் இந்த கொடூர ...