Posts

Showing posts with the label Receipe

கெட்ட கொழுப்பை கரைக்க நடிகர்கள் பயன்படுத்தும் புளிச்ச கீரை தொக்கு! செய்யும் ரகசியம் இதோ!

Image
நமது முன்னோர்கள் உணவே மருந்து என்று கூறுவது மிகவும் பொருத்தமானது. இன்றைய தற்காலத்தில் பலர் துரித உணவுகளை நாடி, ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.  ஆனால், நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள் இன்னும் மறையவில்லை. அப்படி ஒரு ஆரோக்கியம் நிறைந்த பொருள் தான் புளிச்சக்கீரை.  இது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.  இந்த புளிச்சக்கீரையைப் பயன்படுத்தி, ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையுடன் புளிச்சக்கீரை தொக்கு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் புளிச்சக்கீரை – 1 கட்டு புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு பூண்டு – 15 பல் மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 2 வெந்தயம் – 1/4 தேக்கரண்டி தனியா (விதை) – 1 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை புளிச்சக்கீரை தயாரிப்பு...