Posts

Showing posts with the label Actor Prem

"சர்கார்-ல கொஞ்சம் சின்னதாயிடுச்சுல" - பிரபல நடிகரிடம் கேட்ட தளபதி விஜய்

Image
பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் நடிகர் பிரேம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஏற்கனவே, சர்கார் படத்திலும் பிரேம் நடித்திருந்தார். சர்கார் படப்பிடிப்பின் போது பிரேம் கொடுத்த பேட்டியில் படம் முழுக்க விஜய்யுடன் பயணிக்கும் கதாபாத்திரம் என்று கூறினார்.  ஆனால், படத்தில் பிரேம் எங்கு வந்தார் என்று கூட பலருக்கும் நினைவிருக்காது. ஆம், விஜய்யின் அண்ணனாக நடித்திருப்பார் பிரேம். முதல் பாதியில் சில இடங்களில் தோன்றுவார் அவ்வளவு தான். காரணம், பிரேம் சம்பந்தமான பல காட்சிகளை கட் செய்து விட்டார்கள்.  இந்நிலையில், தளபதி 64படப்பிடிப்பு தளத்தில் பிரேம்-ஐ சந்தித்த நடிகர் விஜய் "சர்கார்-ல கொஞ்சம் சின்னத்தாயிடுச்சுல" என்று அவருடைய கதாபாத்திரம் குறித்து விசாரித்தாக நடிகர் பிரேம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.