Posts

Showing posts with the label campus drinking

மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டிய ஆசிரியர்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..

Image
மதுரை, நவம்பர் 7: மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக புகார். பள்ளி நிர்வாகம் புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பாதிக்கப்பட்ட மாணவிகள் நேரடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறை விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், பெற்றோர்களின் தவறான நடத்தை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை வெளிப்படுத்தியுள்ளது.மதுரை மற்றும் சுற்றுபகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த அரசு உதவி பெறும் பள்ளியில், ஆண் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நேரங்களில் மாணவிகளிடம் ஆபாசமான பேச்சு நடத்தி, தவறான வீடியோக்களை காட்டி தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தவறான இடங்களில் மாணவிகளை தொடுவது போன்ற நடவடிக்கைகளும் நடந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இந்தப் புகார்களைப் பள்ளி தலைமைய...