Posts

Showing posts with the label Muthulakshmi

வீட்டுக்குள் கேட்ட முனகல் சத்தம்.. ரத்தம் வந்தும் விடாத கொடூரம்.. கதவை திறந்து பார்த்த அதிர்ந்து போன போலீஸ்.. சிக்கிய மனைவி!

Image
ஹோசூர், டிசம்பர் 9 : கிருஷ்ணகிரி மாவட்டம், ஹோசூர் பார்வதி நகர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. 21 வயது கூலித் தொழிலாளி சரவணனை, அவரது 20 வயது மனைவி முத்துலட்சுமியே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி நள்ளிரவு நடந்த கொலை: முத்துலட்சுமியின் முதல் காதலனும், அதே பகுதியைச் சேர்ந்தவருமான சூர்யா, நண்பர்கள் சக்தி, சந்தோஷ் ஆகியோருடன் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சரவணனின் வாயில் துணியை அடைத்து, கத்தியால் குத்தினர். இரத்தம் வீடு முழுதும் தெறித்தும், வெறி அடங்காமல் தொடர்ந்து குத்தி கொலை செய்தனர். கொலை நடக்கும் போது முத்துலட்சுமி, அருகில் இருந்த மாமியார் வீட்டுக் கதவை வெளிப்புறமாகப் பூட்டி வைத்திருந்தார். இரத்த வெள்ளத்தில் முனகியபடி உயிருக்கு துடித்த கணவனை பார்த்து ரசித்துள்ளார் முத்துலட்சுமி. முதலில், குழந்தை காணமா போச்சுன்னு தேடி போனேன்.. வீட்டுக்கு வந்து பார்த்தா இறந்து கிடந்தார்.. “யாரோ கொலை செய்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்” என கடுமையாக அழுது புலம்பிய முத்துலட்சுமி, போலீஸாரின் தீவிர விசார...