90 வயசில் மனைவியை கொலை செய்த கணவர்.. தமிழ்நாட்டை அதிர வைத்த காரணம்.. பகீர் தகவல்கள்..
கன்னியாகுமரி மாவட்டம், குறுந்தன்க்கோடு அருகே ஆசாரி விளை கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் (90) மற்றும் லக்ஷ்மி தம்பதியருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என ஆறு பிள்ளைகள். பணையேறும் கூலித் தொழிலாளியான சந்திரபோஸ், தனது வருமானத்தில் குடும்பத்தைப் பராமரித்து, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிள்ளைகள் தங்கள் குடும்பங்களில் மூழ்கி, பெற்றோரை மறந்தனர். தாய்-தந்தையை கவனிப்பதில் பிள்ளைகளுக்கு இடையே போட்டி எழுந்தாலும், யாரும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை. ஆறு பிள்ளைகளும் மாதாமாதம் ஷிப்ட் முறையில் உணவு மட்டும் வழங்கினர். மூன்று ஆண்டுகளுக்கு முன், வயது முதிர்வால் லக்ஷ்மி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். சந்திரபோஸ், தன்னால் முடிந்த வேலைகளுக்கு சென்று, மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்தார். ஆனால், மூன்று மாதங்களுக்கு முன், சந்திரபோஸின் இரு கண்களும் பார்வையிழந்தன. மனைவியை பராமரிக்க முடியாமல், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றி தம்பதியர் தவித்தனர். லக்ஷ்மியின் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு, வலியால் அவர் அலறினார். பிள்ளைகளி...