பெட்ரூமில் கண்ட கண்றாவி காட்சி.. உல்லாச கதையை கேட்டாலே நாராசம்.. ஃபாரின் கணவனுக்கு வீடியோ காலில் குழந்தை..
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் நடந்த பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயது சிறுமி கார்த்திகாவை அவரது தாய் மலர்செல்வி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்த சம்பவம், மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த கொலைக்கு கள்ளக்காதல் தான் காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் பின்னணி ஆட்டுக்குளம் கிராமத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்து வந்தவர் மலர்செல்வி. இவரது கணவர் சமயமூர்த்தி துபாயில் வேலை பார்த்து வருவதால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வந்து செல்வார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், அதில் இரண்டாவது மகள் தான் ஐந்து வயது கார்த்திகா. கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மலர்செல்வி தனது இரு குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று காலை 10 மணியளவில், கார்த்திகா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து, மலர்செல்வியின் அலறல் சத்தம் ஊரையே உலுக்கியது. ஊர்க்காரர்களும் உறவினர்களும் ஒன்று கூடி, குழந்தையைத் தேடி ஊரையே சல்லடை போட்டு தேடினர். கடைக...