Posts

Showing posts with the label health caution

பீமவாலி..யானை கவளம்..Scam? செக்குல ஆட்டுன சுத்தமான 'உருட்டு' சிக்கினாரா பாடிபில்டர் ராஜா பாரோன்?

Image
சமூக வலைதளங்களில் பிரபலமான பாடி பில்டர் ராஜா என அழைக்கப்படும் ராஜா பாரோன் அவரது உடற்கட்டு மற்றும் வலிமையான தோற்றத்தால் பலரது கவனத்தை ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட இவர், யானை மீது ஏறுவது, பைக் தூக்குவது, லாரி இழுப்பது போன்ற அதிரடி ரீல்களை வெளியிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களும், யூடியூப் சேனலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.ராஜா பாரோன் தனது உடற்பயிற்சி வீடியோக்களுடன் சமீப காலமாக "யானை கவளம்" என்ற பெயரில் ஒரு உணவுப் பொருளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். இது எள்ளு, கருப்பட்டி, சுக்கு, மிளகு, திப்பிலி (லாங் பெப்பர்), தேன் மற்றும் பல்வேறு தாவர விதைகள் போன்ற இயற்கைப் பொருட்களை பாரம்பரிய முறையில் உரலில் இடித்து தயாரிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். இதில் பிரிசர்வேட்டிவ்ஸ் எதுவும் இல்லை என்றும், எலும்புகள் மற்றும் நரம்புகளை வலுப்படுத்தும், சுறுசுறுப்பைத் தரும் என்றும் அவர் தனது வீடியோக்களில் தீவிரமாக ப்ரமோட் செய்து வருகிறார். "யானை பலம் தரும...