Posts

Showing posts with the label Meghana Raj

நடிகருடன் தொடர்பு.. 2-ம் திருமணம்.. நடிகை மேக்னா ராஜ் கூறிய அதிர வைக்கும் பதில்!

Image
மலையாள மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை மேக்னா ராஜ், கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2018இல் திருமணம் செய்தார்.  2020இல் சிரஞ்சீவி மாரடைப்பால் மறைந்தபோது, மேக்னா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். அதே ஆண்டு அவர்களது மகன் ராயன் ராஜ் சர்ஜா பிறந்தார். சிரஞ்சீவியின் மறைவுக்குப் பிறகு, மேக்னாவின் இரண்டாவது திருமணம் குறித்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவின.  குறிப்பாக, நடிகர் விஜய் ராகவேந்திராவுடனும், பிக் பாஸ் கன்னட வெற்றியாளர் பிரதமுடனும் அவரை இணைத்து தவறான செய்திகள் பரவின.சமீபத்திய பேட்டியொன்றில், மேக்னா தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினார்.  “சிலர் என்னை மறுமணம் செய்யச் சொல்கிறார்கள், மற்றவர்கள் என் மகனுடன் மகிழ்ச்சியாக இரு என்கிறார்கள். நான் யாருக்கு கீழ்ப்படிவது?” என்று கேட்டார். சிரஞ்சீவி எப்போதும் “உலகம் சொல்வதைப் பொருட்படுத்தாமல், உன் மனதைக் கேள்” என்று அறிவுறுத்தியதாகவும், தற்போது திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் கூறினார்.  மேலும், “சிரஞ்சீவி எனக்கு வாழ்க்கையை வாழும் விதத்தை கற்றுக் கொடுத்தார். நாளைய பற்றி யோசிக்காமல், இன்றை வாழ்கிற...