ஓட்டு இருக்கு.. ஆனா, சீட்டு இல்ல.. தடுமாறும் த.வெ.க.. சர்வே ரிப்போர்ட்டால் பீதியில் விஜய்..
சென்னை, மார்ச் 12, 2026 : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி தனது அரசியல் உத்திகளில் மாற்றம் கொண்டுவரலாமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், TVK கட்சி தனது தொண்டர்களை வைத்து நடத்திய தொகுதி வாரியான கருத்துக்கணிப்புகள், கட்சியின் வாக்கு சதவீதத்தை உயர்த்தியிருந்தாலும், வெற்றி வாய்ப்புகளை உறுதிப்படுத்தாததால் கட்சி தலைமை திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி தனது தொண்டர்களை வைத்து வீடு வீடாகச் சென்று கருத்துக்கணிப்பு நடத்தியது என்றால், அது TVK தான். கடந்த சில வாரங்களாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொகுதி வாரியாக மக்களிடம் சென்று, TVK-யின் பலத்தை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்புகளின் போது, ஆளும் திமுகவைச் சேர்ந்த சிலர் தொண்டர்களைத் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளதாக செய...