உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கு.. வெளியான அதிரடி உத்தரவு
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை (டி.ஜி.ஐ.டி. - இன்வெஸ்டிகேஷன்) அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்-திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், அண்மையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டிருந்தார். இதில், 2021 சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவுடன் ஒப்பிடும்போது பல முரண்பாடுகள் இருப்பதாக அந்தத் தொகுதி வாக்காளர் ஆர். குமாரவேல் (56) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் கூறப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் மனுதாரர் குமாரவேல், 2021 வேட்பு மனுவில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ₹7.36 கோடி முதலீடு செய்ததாகக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். ஆனால், 2026 வேட்பு மனுவில் இந்த முதலீடு அவரது பெயரில் குறிப்பிடப்படவில்லை. அவரது மனைவி கிருத்திகா உதயநிதி அந்த நிறுவனத்த...