பழிவாங்க பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை..? என்ன நடக்குது தமிழ்நாட்டில்..? எடப்பாடி ஆவேசம்..
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். திமுக அரசின் குறைபாடுகளையும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இவரது சுற்றுப்பயணத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும், செல்லும் இடங்களில் எல்லாம் மாநாடு போன்று கூட்டம் கூடி வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணத்தை சீர்குலைக்கும் வகையில் திமுகவினர் 108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்துவதாக அதிமுக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது, இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் குற்றச்சாட்டுப்படி, பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடத்தைத் தாண்டி, நடக்க...