Posts

Showing posts with the label phone dispute

காதலியை அழைத்து வந்த காதலன்.. அடைக்கலம் கொடுத்த நண்பன்.. இறுதியில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
கும்பகோணம், நவம்பர் 16: காதல் ஜோடிக்காக உதவிய நண்பனை அவமானமாக அடித்து வாய்க்காலில் தள்ளி கொன்ற சம்பவம், கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது தந்தையான பாலாஜியை அவரது நண்பர்கள் அபிஷேக் மற்றும் பிரவீன் ஆகியோர் மது அருந்தும் போது தகராறில் ஈடுபட்டு கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்திற்கு காரணம், அபிஷேக்கின் காதலியுடன் தொடர்புடைய அந்தரங்க புகைப்படங்கள் இருந்த செல்போனைத் திரும்பக் கோரியதே எனக் கூறப்படுகிறது.மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயது பாலாஜி, திருமணமானவராவார் மற்றும் இரு குழந்தைகளின் தந்தை. அவர் தப்பாட்டு கலைஞராகவும், அவரது நண்பர் அபிஷேக் அறுவடை மிஷன் ஓட்டுனராகவும், பிரவீன் தப்பாட்டு கலைஞராகவும் உள்ளனர். நவம்பர் 13-ஆம் தேதி அபிஷேக்கின் 17 வயது காதலி (18-ஆம் தேதி பிறந்தநாள்) அவருடன் திருமணம் செய்ய சென்றதாகக் கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களுக்குச் சென்று, இறுதியாக பாலாஜியின் வீட்டில் தங்கினர். அங்கு அடைக்கலம் அளித்த பாலாஜி, அவர்களுக்கு உதவியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆனால், கல்லூரிக்குச் சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததால், அவ...