Posts

Showing posts with the label animal fat suspicion

பார்த்தால் நெகு நெகு நெய்.. ஆனால், உள்ளே இருப்பது என்னன்னு தெரியுமா..? கையும் களவுமாக சிக்கிய தம்பதி..!

Image
பெங்களூரு, டிசம்பர் 7 : கர்நாடகப் பால் கூட்டமைப்பிற்குச் சொந்தமான 'நந்தினி' நெய்யில் பெரும் கலப்பட மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியின் மூளையாகச் செயல்பட்ட கணவன்-மனைவி இருவரை மத்தியக் குற்றப் பிரிவு (சிசிபி) காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் சிவகுமார் (எ) சிவன்குமார் மற்றும் ரம்யா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் பெங்களூரு சாமராஜ்பேட்டை சேர்ந்த நஞ்சம்பா அக்ரஹாரா பகுதியில் 'கிருஷ்ணா எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில் நெய் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளனர். இங்கு, புகழ்பெற்ற 'நந்தினி' வணிகப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, கலப்பட நெய்யை பெரிய அளவில் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.  நந்தினி நெய்யின் உயர் தேவையைப் பயன்படுத்தி, விலை மலிவான கலப்படப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நெய்யை சுத்தமானதாகக் கூறி அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டியுள்ளனர். இந்த மோசடி, நெய் விநியோகத்தில் ஏற்பட்ட அசாதாரண மாற்றங்கள் காரணமாக கர்நாடகப் பால் கூட்டமைப்பின் உள் விசாரணையில் சிக்கியது.  கட...