சிகிச்சைக்கு வந்தவரின் விந்தணுவை எடுத்து பெண் மருத்துவர் செய்த பகீர் சம்பவம்..!குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஒரு செயற்கை கருத்தரிப்பு மையம், குழந்தையில்லாத தம்பதிகளை ஏமாற்றி, குழந்தை கடத்தல் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடியானது, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது, குறிப்பாக செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நடந்தது என்ன? செயற்கை கருத்தரிப்பு மையமான யுனிவர்சல் ஸ்ருஷ்டி ஃபெர்ட்டிலிட்டி சென்டர் (Srushti Test Tube Baby Centre), கடந்த 25 ஆண்டுகளாக, குழந்தையில்லாத தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, சுமார் 30 லட்சம் ரூபாய் வசூலித்து வந்துள்ளது. இதில், 15 லட்சம் வாடகைத் தாய்க்கும், மீதி மருத்துவமனைக்கும் பிரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த மையம், ஹைதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, கொண்டாபூர் உள்ளிட்ட பல இடங்களில் கிளைகளைப் பரப்பி, இந்தியா முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மையங்களை நிறுவியுள்ளது. சமீபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதி, 30 லட்சம் ரூபாய் செலவு செய்து, இந்த மையத்தின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றனர்....