Posts

Showing posts with the label COD parcels

பெண்ணின் பெயருடன் கெட்ட வார்த்தையை சேர்த்து தினமும் 100 பார்சல்..! நூதன முறையில் டார்ச்சர் கொடுத்தவர் கைது..!

Image
போட்டி தொழில் செய்வதை பொறுக்காததால், முன்னாள் பெண் ஊழியருக்கு தினமும் நூற்றுக்கணக்கான கேஷ் ஆன் டெலிவரி (COD) பார்சல்களை ஆபாச புனைப்பெயர்களுடன் அனுப்பி தொல்லை கொடுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், 2023-இல் புளியகுளத்தில் உள்ள ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் அந்த நிறுவனத்தை விட்டு விலகி, சொந்தமாக அதே தொழிலை தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நிறுவன உரிமையாளர் கோவை புதூரைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார் (39), கடந்த சில மாதங்களாக அந்தப் பெண்ணின் முகவரிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட COD பார்சல்களை ஆர்டர் செய்துள்ளார். பார்சல்களில் அந்தப் பெண்ணின் பெயருடன் ஆபாசமான புனைப்பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. டெலிவரி செய்ய வரும் ஊழியர்கள் போனில் அழைத்து அந்த ஆபாச பெயர்களை உரக்கக் கூறி, பார்சலை வாங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இதனால் போன் அழைப்புகள் தொடர்ந்து வந்ததால், அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து கடந்த ஏப்ரல் மாதம் கோவை சைபர் கிரைம் போலீசார...