வெளிநாட்டில் கணவன்.. எட்டு வருடங்களாக குழந்தை இல்லாத மனைவி செய்த அசிங்கம்.. துடிதுடித்து பிரிந்த 2 உயிர்கள்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சோகச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு கல்லூரி நாட்களில் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மோகன் - பிரியா ஷர்மா தம்பதியின் வாழ்க்கை, எட்டு ஆண்டுகள் கழித்து இரு துயர முடிவுகளுடன் முடிந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த பிரியா ஷர்மா, இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றும் தந்தையின் மகள். இரு குடும்பங்களின் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த திருமணம் மகிழ்ச்சியாகத் தொடங்கியது. ஆனால் எட்டு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத ஏக்கம் அவர்கள் இருவரையும் வாட்டி வதைத்தது. அதே நேரத்தில் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற உறுதியும் இருந்தது. இதன் காரணமாக சிங்கப்பூரில் கிடைத்த வேலை வாய்ப்பை ஏற்று மோகன் அங்கு சென்றார். மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த அவர், வீட்டுக்கு மாதம் தோறும் இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பி வைப்பது வாடிக்கையாக இருந்தது. கணவர் வெளிநாட்டில் இருந்த ஒன்றரை வருட காலத்தில், வீட்டில் தனிமையில் தவித்த பிரியா ஷர்மாவுக்கு ஆறுதலாக இருந்தவர் மோகனின் தம்பி அசோக் ராஜா. மாமனார், மாமியார் என இருவரும் ...