திருப்பதி போறீங்களா..? இனி இதற்கெல்லாம் தடை.. தேவஸ்தானம் போட்ட அதிரடி உத்தரவு.. என்ன காரணம்..?
திருப்பதி, நவம்பர் 8, 2025 : திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) நிர்வாகம், திருமலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் போன்ற துரித உணவுகளுக்கு நிரந்தர தடை விதிக்கும் என அறிவித்துள்ளது. இந்த தடை, பக்தர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், பாரம்பரிய சைவ உணவுகளை ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சைனீஸ் ரக உணவுகள் உள்ளிட்ட அனைத்து துரித உணவுகளும், அவை சைவமானாலும் திருமலையில் அனுமதிக்கப்படாது. நேற்று நடைபெற்ற தேவஸ்தானத்தின் மாதாந்திர நிர்வாக கூட்டத்தில் இந்த முடிவு விவாதிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில், திருமலையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சாப்பாடு, சாம்பார், தோசை, இட்லி, களி, பொங்கல், தயிர் சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தக்காளி சாதம் போன்ற பாரம்பரிய சைவ உணவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. TTD கூடுதல் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் இதுகுறித்து விளக்கமளிக்கையில், "மேலும் நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் போன்ற உணவு வகைகள் கெட்டுப் போய்விட்டதா இல்லையா என்பதை சாப்பிடும் போது ...