‘காதலனை நம்பி OYO ரூமுக்கு சென்ற காதலி..’ நடு இரவில் லாட்ஜுக்கு போன் போட்ட தோழி.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..
வேப்பேரி, சென்னையின் பரபரப்பான பகுதி. நள்ளிரவு நேரத்தில், ஒரு தனியார் OYO லாட்ஜின் மேலாளருக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பு, அந்த அமைதியான இரவைப் புரட்டிப் போட்டது. "சார், ரூம் நம்பர் 103-ல் ஒரு பெண் தூக்கில் தொங்கப் போவதாகப் பேசியிருக்காங்க. உடனே போய் பாருங்க!" என்ற பதற்றமான குரல், தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் மணிகண்டனைத் திடுக்கிட வைத்தது. ஸ்பேர் கீயை எடுத்துக் கொண்டு, படபடப்புடன் அவர் அறை எண் 103-ஐ நோக்கி ஓடினார்.கதவைத் திறந்தவுடன் கண்ணெதிரே தெரிந்த காட்சி அவரை உறைய வைத்தது. அறையின் மின்விசிறியில் ஒரு இளம்பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியில் உறைந்த மணிகண்டன் உடனடியாக காவல்துறைக்கு அழைத்து விவரத்தைத் தெரிவித்தார். சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேலாளரிடம் விசாரணை தொடங்கியது. மேலாளரின் வாக்குமூலம் "நைட் 11 மணி இருக்கும், சார். ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் லாட்ஜுக்கு வந்தாங்க. முக்கியமான வேலை விஷயம்னு சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரும் ரூம் 103-க்கு போனாங்க. சில மணி நேரத்துல அந்த இளைஞன் மட்டும் வ...