Posts

Showing posts with the label Director Mohanraja

"கடவுளை காப்பாற்ற யார் இருக்கா..?" - இயக்குனர் மோகன் ராஜா சுளீர் பதிவு..!

Image
சமீபகாலமாக இந்து மதம் மற்றும் இந்து கடவுள்கள் குறித்த அவதூறுகளும், சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. பகுத்தறிவு என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை காயப்படுத்தி மதமாற்றம் தொடங்கி அரசியல் ஆதாயம் வரை தேடி திளைக்கும் கூட்டம் செய்யும் வேலை தான் இது. இதற்கு ஆரம்ப காலம் முதலே கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், தற்போது இதற்கு எதிராக கடந்த சில நாட்களாக கடுமையான எதிர்ப்புகள் வர தொடங்கியுள்ளன. கடவுளை வணங்கும் எல்லோருக்கும் தெரியும், ஒருவன் கத்தி எடுத்துக்கொண்டு நம்மை குத்த வந்தால் கடவுள் வந்து தட்டிவிட போவதில்லை என்று. அவர்கள் பார்வையில் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. நான் தவறு செய்தால் கடவுள் தண்டனை கொடுப்பார். நல்லது செய்தால் நிச்சயம் நம்மை நிம்மதியாக வைத்திருப்பார் என்ற அடிப்படை நம்பிக்கை. அது எந்த மதமாக இருந்தாலும் இது தான் உண்மை. ஆன்மிகம் இல்லாத மனம் நிச்சயம் பொதுநலனை பற்றி சிந்திக்காது. சிந்திக்க தெரியாது. ஆன்மிகம் இல்லாத மனம் அமைதியாக இருக்காது, அமைதியாகவும் இருக்க முடியாது. விரைவில் இந்த கூட்டம் நம் தமிழ்மண்ணை விட்டு விரட்டி அடிக்கப்படும் என நம்புவோம். இந்நலையில், இயக்குனர் மோ...

மீண்டும் எப்போது தளபதியை இயக்குவீர்கள்..? - வேலாயுதம் இயக்குனரின் அதிரடி பதில்..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தைஇயக்கியவர் இயக்குனர் மோகன் ராஜா. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியது. Assassin's Creed வீடியோ கேம் கதாபாத்திரத்தை போன்ற காஸ்ட்யூமில் விஜய் இருக்கிறார் என்ற புகார் எழுந்தது.ஆனால்,  படத்தில் சிலநிமிடம் மட்டுமே வரும் காட்சி இது என்று கூறப்பட்டதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைபெற்றது.அதன் பிறகு, மோகன் ராஜா இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் அடித்தன. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவெடுத்தார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம்ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம் மீண்டும் விஜய்யை இயக்கம் திட்டம் உள்ளதா..? என்று கேட்டதற்கு, நிச்சயமாக விஜய்யை இயக்குவேன்.தனிஒருவன் இரண்டாம் பாகம் முடிந்த பிறகு விஜய்யை இயக்குவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

அப்பாவின் அந்த கனவை நிறைவேற்றி விட்டோம் - ஜெயம் ரவி, மோகன்ராஜா நெகிழ்ச்சியான பேச்சு

Image
நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் மோகன்ராஜா, அண்ணன், தம்பி இருவரும் அவரவர் துறையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர். சர்ச்சை, வம்பு, கிசுகிசு என எதிலும் சிக்காமல் சினிமாவில் பயணித்து வருபவர்கள் வெகுசிலர் மட்டுமே. அதில், இவர்களும் அடங்குவர். இவர்களுகடைய அப்பா பிரபல எடிட்டர் மோகன். அம்மா வரலட்சுமி மோகன். இருவரும் ஆளுக்கொரு புத்தகம் எழுதியுள்ளனர். ஆம், எடிட்டர் மோகன் "தனிமனிதன் ", என்ற புத்தகத்தையும் அவரது மனைவி வரலட்சுமி மோகன், "வேலியற்ற வேதம்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளனர். வருகிற டிசம்பர் 3ந் தேதி பிரமாண்ட விழாவில் இது வெளியிடப்படுகிறது.  இதுகுறித்து மோகன் ராஜாவும், ஜெயம்ரவியும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதில் பேசிய ஜெயம் ரவி, ஒரு நடிகனாக , ஒரு இயக்குனராக வரவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தேன் என்று அப்பா அடிக்கடி கூறுவார்.  எங்கள் அப்பா கண்ட அந்த கனவை, நானும் , அண்ணனும் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம்.  ரிலே ரேஸில் நாலு சுற்று ஓடினால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் அந்த நாலில் மூன்று சுற்றை அவரே கஷ்டப்பட்டு ஓடிவிட்டு. ஜெயிக்கிற இறுதிசுற்றை ...

தளபதி 65 - 9 ஆண்டுகளுக்கு பிறகு ப்ளாப் பட இயக்குனருடன் இணையும் விஜய்..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் "பிகில்" திரைப்படம் 2019 தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.  இந்தப்படத்தின் மீது எக்கசக்க எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் தன்னுடைய 64-வது நடிக்கவுள்ளார் என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.  இப்படம் முடிந்த கையேடு மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதுக்குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 65 படத்தை இயக்கவுள்ள இயக்குனர் யார் என பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. அதன் படி, ஏற்கனவே தனக்கு ஒரு ப்ளாப் படத்தை கொடுத்த இயக்குனருடன் இணையவுள்ளார் நடிகர் விஜய். ஆம், கடந்த 2011-ம் வெளியா வேலாயுதம் படத்தின் இயக்குனர் "ஜெயம்" மோகன்ராஜ-வுடன் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளார் நடிகர் விஜய் என அந்த வாரஇதழ் தெரிவித்துள்ளது. Continue Reading...