Posts

Showing posts with the label Mannachanallur

வசமாக சிக்கிய கைக்கூலிகள்! ஓட்டு போட்டா கிட்னி அவுட்! கொதிக்கும் மக்கள்!

Image
திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனலட்சுமி சீனிவாசா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உரிமையாளர் சீனிவாசனின் மகன் திரு. கதிரவன் அவர்களுக்கு எதிராக தொகுதி திமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கிட்னி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இந்த மருத்துவமனையின் உரிமையாளரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், “மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?” என தொகுதி பொறுப்பாளர்கள் நேரடியாக மாவட்ட திமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், திமுக பொறுப்பாளர்கள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த திரு. கதிரவன், தனது தந்தையின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களை நேரடியாக வாக்கு சேகரிப்பு பணியில் இறக்கியுள்ளார். தொகுதியின் திமுக அதிகாரப்பூர்வ பொறுப்பாளர்களை முழுமையாக தாண்டி, அவர் நியமித்த ஊழியர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்ட அந்தப் பகுதி மக்கள், இரண்டு ஊழியர்கள...