சேலம் : விநாயகா மிஷன்ஸ் கல்லூரியில் மாணவிக்கு பா*யல் கொடுமை! குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!
மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்குப் பிறகு அதிரடி; நிர்வாகத்தின் மீது தேசிய மருத்துவ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை சேலம்: விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஒரு மாணவி, இரு பேராசிரியர்களால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது. கல்லூரி நிர்வாகம் இந்த புகாரை முறையாக விசாரிக்காமல் மூடி மறைக்க முயன்றதாகவும், மற்றொரு பேராசிரியர் தேர்வு மதிப்பெண்களை குறைப்பதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து, துணிச்சலுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த மாணவியின் புகாரின் அடிப்படையில், கல்லூரி நிர்வாகம் கடந்த ஜூன் 21ஆம் தேதி அந்த இரு பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த மாணவி தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும், அவரது அறிவாற்றல் காரணமாக பேராசிரியர்கள் உட்பட பலரின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கல்லூரியில் பணியாற்றும் ராம்குமார் மற்றும் சுரேந்தர் ஆகிய பேராசிரியர்கள் அவரை தவறான விதத்தில் அணுகி, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக மாணவி குற்றம் சா...