Posts

Showing posts with the label Heguru training

தமிழக அரசு அதிரடி.. குழந்தை வளர்ச்சி பற்றி தவறான தகவல்.. சிக்கிய ரோபோ ஷங்கர் மகள்..!

Image
விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் ‘பிகில்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் சில படங்களில் நடித்தார். தனது முறைமாமன் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது.  இந்நிலையில், இந்திரஜா மற்றும் கார்த்திக் தங்களது யூடியூப் பக்கத்தில், தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனர்.  மேலும், குழந்தைகள் பிறந்தவுடன் அங்கன்வாடியில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்திரஜாவின் இந்த கூற்றுகள் ஆதாரமற்றவை என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  இந்திரஜாவின் யூடியூப் வீடியோவில், ஹெகுரு பயிற்சி தொடர்பாக பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.  தமிழ்நாட்டில் குழந்தைகளின் கல...